Sunday, December 18, 2011

முகமூடி

நம்மில்......
சிலருக்கு சில சமயங்களில் தேவைப்படும் ஒன்று!
பலருக்கு பல சமயங்களில் தேவைபடும் ஒன்று!
இன்னும் சிலருக்கு இது இல்லாமல் முகத்தை காட்டுவது என்பதே முடியாத காரியம்............
இதை பயன்படுத்தாமல் இந்த உலகில் எவரும் இருக்கமுடியாது
தக்க சமயத்திற்க்கு ஏற்றவாறு இதனை மாற்றவும் செய்வார்கள்
சிலர் இதை பயன்படுத்தி கையும் களவுமாக மாட்டியுங்கொள்கிறார்கள்
இதை நேர்த்தியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் தான்....
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்....

சிரிக்க -- சிரிக்கவைக்க
அழ --அழவைக்க
பயப்பட-- பயப்படவைக்க
வெட்கப்பட-- வெட்கப்படவைக்க
வியப்படைய -- வியப்படையவைக்க
எதிர்க்க --எதிர்க்கவைக்க
மயக்க -- மயக்கவைக்க
கோபப்பட -- கோபப்படவைக்க
அதிர்ச்சியடைய -- அதிர்ச்சியடையவைக்க
இன்னும் பலவற்றை செய்யவும் செய்யவைக்கவும் இது தேவைப்படுகிறது


அகத்தை மறைக்கும் ”முகமூடி”

No comments:

Post a Comment